ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மை தேர்வு முடிவு.. மாணவர்களின் சந்தேகங்களுக்கு மொபைல் எண் அறிவிப்பு
பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மாணவர்கள் ஆர்வத்துடன் முடிவுகளை பார்த்து வருகின்றனர்.
ஐஐடி, என்ஐடி போன்ற படிப்புகளுக்கு ஜேஇஇ தேர்ச்சி பெறவேண்டும் என்ற நிலையில் 2024-25ஆம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு கடந்த ஜனவ மாதம் நடந்து பிப்ரவரியில் முடிவுகள் வெளியாகின.
இந்த நிலையில் ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மை தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெற்ற நிலையில் இந்த தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இந்த முடிவை https://jeemain.nta.ac.in/ என்ற இணையதளத்தில் சென்று மாணவர்கள் தங்கள் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணைய தளத்தில் அறியலாம் என்றும் வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000/69227700 ஆகிய எண்கள் அல்லது jeemain @nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
Edited by Siva