கண்ணாடியுடன் வலம் வர உள்ள முதல்வர் எடப்பாடி!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கண் புரை நீக்க அறுவை சிகிச்சை செய்த பின்னர் அவர் தற்போது மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் கண்ணாடி அணிந்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கண்ணில் புரை ஏற்பட்டதால். அவருக்கு ஆபரேசன் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடந்த சில தினங்களாக கண்களில் பிரச்சனை இருந்து வந்துள்ளது. கண்களில் தொடர்ந்து தூசி படிந்து வருவதால் கண் புரை நோய் வரும். இதனால் பாதிக்கப்பட்ட அவருக்கு கடந்த 4-ஆம் தேதி அறுவைசிகிச்சை செய்யப்பட்டு அன்றே வீடு திரும்பினார்.
மருத்துவர்கள் அவரை சில நாட்கள் ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் ஓய்வில் உள்ள முதல்வரை துணை முதல்வர் ஓபிஎஸ் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த புகைப்படத்தில் முதல்வர் கண்ணாடி அணிந்துள்ளார். இதுவரை கண்ணாடியுடன் பார்த்திராத முதல்வரை இனி வரும் நாட்களில் கண்ணாடியுடன் பார்க்கலாம் என்கிறார்கள். மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் அவர் கண்ணாடி அணிந்துள்ளார்.