Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரஜினி என்ன பொறியியல் பட்டதாரியா சிஸ்டம் சரியில்லை என சொல்ல!

Last Modified சனி, 10 பிப்ரவரி 2018 (11:57 IST)
தமிழக அரசியலில் குதித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் நீண்ட நாட்களாக கூறிவரும் குற்றச்சாட்டு, தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை. அதை முதலில் சரிசெய்ய வேண்டும் என்பது தான்.
 
இந்நிலையில் ரஜினியிடம் இந்தியாவின் சிஸ்டம் சரியில்லையா, தமிழகத்தின் சிஸ்டம் சரியில்லையா என மீண்டும் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் தான் சிஸ்டம் சரியில்லை, அதைத்தான் முதலில் சரி செய்ய வேண்டும் என்றார்.
 
இந்நிலையில் ரஜினியின் இந்த கருத்து குறித்து பதில் அளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், ரஜினி எந்த சிஸ்டம் சரியில்லை என்று கூறுகிறார் எனத் தெரியவில்லை. எனவே அதனை ரஜினி முதலில் தெளிவுபடுத்த வேண்டும். பொறியியல் பட்டதாரிகள் தான் சிஸ்டம் சரியில்லை என்று கூறுவார்கள், ரஜினி பொறியியல் பட்டதாரியா என்று எனக்குத் தெரியவில்லை என்றார்.
 
மேலும், வட மாநிலங்களில் தீவிரவாதிகள் நிறைய பேர் உள்ளனர். ரஜினி அங்கு சென்று சிஸ்டத்தை சரி செய்யட்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :