Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கர்நாடக சிஸ்டம் சரியா இருக்கா? ரஜினி மீது பாய்ந்த ஜெயகுமார்!

Last Updated: சனி, 10 பிப்ரவரி 2018 (10:57 IST)
நடிகர் ரஜினிகாந்த தனிக்கட்சி தொடங்கி அடுத்து நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாக அறிவித்தார். தற்போது அவரது நற்பணி மன்ற நிர்வாகிகள் மூலம் ஆள் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் தமிழகத்தில் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும். உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும். கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றுவது பற்றி காலம்தான் முடிவு செய்யும் என தெரிவித்தார்.

இந்நிலையில், அமைச்சர் ஜெயகுமார் இது குறித்து பின்வருமாறு பேசினார். சிஸ்டம் சரியில்லை என்று கூறினால், பொறியியல் பட்டதாரிகள்தான் சிஸ்டம் சரி இல்லை கூறுவார்கள், ரஜினிகாந்த் என்ன இன்ஜினீயரா? எனக்கு தெரியவில்லை.
சிஸ்டம் சரியில்லை என்று கூறும் ரஜினிகாந்த் கர்நாடகா சென்று சிஸ்டத்தை சரிசெய்து காவிரி நீரை பெற்றுத் தரட்டும், எங்களை சீண்டினால் விடமாட்டோம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

நாங்களாகவே யாரிடமும் சண்டைக்கு போவதில்லை, ஆனால் வந்த சண்டையை விடமாட்டோம், அந்த அளவுக்குத்தான் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் எங்களை வளர்த்தெடுத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :