புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 17 ஆகஸ்ட் 2022 (20:59 IST)

திமுக ஐ.டி விங் நிர்வாகி மீது பாஜக கட்சியினர் காவல்நிலையத்தில் புகார்.

bjp
பாஜக தமிழக தலைவர் கே.அண்ணாமலை ஆகியோரை தரக்குறைவாக பேசி வந்த நிலையில், தேசிய கொடியையும் அவமதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பி திமுக ஐ.டி விங் நிர்வாகி ஷாஜகான்  என்பவர் மீது காவல்நிலையத்தில் புகார்.

பிரதமர் மோடியையும், தேசிய கொடியையும் அவமதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்த திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி கரூர் அருகே பாஜக வினர் காவல்நிலையத்தில் புகார் அளிகப்பட்டுள்ளது.
 
 
திமுக கட்சி தற்போது கருத்துரிமை என்கின்ற பெயரில் பிரதமர் மோடி, பாஜக தமிழக தலைவர் கே.அண்ணாமலை ஆகியோரை தரக்குறைவாக பேசி வந்த நிலையில், தேசிய கொடியையும் அவமதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பி திமுக ஐ.டி விங் நிர்வாகி ஷாஜகான் என்பவர் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்ததையடுத்து கரூர் மாவட்ட பாஜக சார்பில் அரவக்குறிச்சி மேற்கு, கிழக்கு ஒன்றியங்களின் சார்பில் பாஜக மேற்கு ஒன்றியத்தலைவர் ஜவஹர்லால், கிழக்கு ஒன்றியத்தலைவர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில், கரூர் மாவட்ட ஊடக பிரிவு மாவட்டத்தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலையில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.