1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (20:19 IST)

போலி நிறுவனம்: சின்னத்திரை நடிகை மீது சினேகன் புகார்

Snehan
சின்னத்திரை நடிகை ஒருவர் போலி நிறுவனம் நடத்தி வருவதாக நடிகரும் பாடல் ஆசிரியருமான சினேகன் காவல்துறையில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 இதுகுறித்து சினேகன் கூறியபோது சினேகன் பவுண்டேஷன் என்ற அமைப்பை நாங்கள் பல வருடங்களாக நடத்தி வருகிறோம் என்றும் அந்த அமைப்பின் மூலம் பல சமூக சேவைகள் செய்து வருகிறோம் என்றும் தெரிவித்தார் 
 
இதே பெயரில் சின்னத்திரை நடிகை ஒருவர் நிறுவனம் ஆரம்பித்து அந்த நிறுவனத்திற்கு பொது மக்களிடமிருந்து பணம் வசூலித்து வருவதாக எங்களுக்கு தகவல் வந்தது என்றும் இதனை அடுத்து அந்த நிறுவனத்தை தொடர்பு கொள்ள முயன்றபோது தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அந்த நிறுவனத்தின் முகவரி போலி என்பது தெரியவந்தது என்றும் கூறினார்
 
இருப்பினும் இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம் என்றும் காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.