புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 7 நவம்பர் 2020 (08:34 IST)

கமல்ஹாசன், சரத்குமார் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! – ஆசாமியை தேடி வரும் போலீஸ்!

தமிழகத்தில் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் இருந்து வரும் பிரபலங்களான கமல்ஹாசன் மற்றும் சரத்குமார் ஆகியோர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மமான போன் கால் வந்துள்ளது. அதில் பேசிய நபர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை இல்லத்திலும், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் கொட்டிவாக்கம் இல்லத்திலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.

உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுத்த போலீஸார் கமல்ஹாசன் மற்றும் சரத்குமார் வீடுகளில் சோதனை நடத்தியதில் அது வெறும் புரளி என தெரிய வந்துள்ளது. இந்நிலையில் மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ரஜினி, விஜய் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விழுப்புரம் புவனெஷ்தான் இதையும் செய்தாரா என்றும் விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல்.