வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 6 நவம்பர் 2020 (22:15 IST)

பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிவு !

தமிழகத்தில் பாஜக வேல் யாத்திரை நடத்த தடை விதித்த நிலையில் தடையை மீறி யாத்திரை நடத்த முயன்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாஜக சார்பில் வேல் யாத்திரை நடத்துவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக அனுமதி அளிக்க மறுத்தது தமிழக அரசு. இந்நிலையில் திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் கடும் போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் சென்னையிலிருந்து காரில் திருத்தணி கிளம்பி சென்ற பாஜக தமிழக தலைவர் எல்.முருகனுக்கு திருத்தணி செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் திருத்தணி சென்ற எல்.முருகன் தலைமையில் பாஜகவினர் வேல் யாத்திரையை தொடங்க முயற்சித்தனர். இதனால் போலிஸார் பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து தடையை மீறி யாத்திரை செல்ல முயன்ற பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களை அருகில் உள்ள மண்டபங்களில் தங்க வைத்து மாலை விடுவிக்கப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

எந்தத் தடைகளையும் கண்டு அஞ்சாத சிங்கங்களாக பாஜக கட்சி யாத்திரை சென்று வருகிறது. வரும் தேர்தலில் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிதான் ஆட்சியில் இருக்கப் போகிறது என்று பாஜக தலைவர் எல்.முருகன் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.

இதையடுத்து திருத்தணி போலீஸார் பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் அவரது ஆதவராளர்களைக்  கைது செய்து விடுதலை செய்யப்பட்ட நிலையில் எல்.முருகன் உள்ளிட்ட சுமார் 508 பேர் மீது   5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.