1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 25 ஆகஸ்ட் 2017 (00:27 IST)

ஒன்றரை மணி நேரத்தில் மீண்டும் பல்டி அடித்த எம்.எல்.ஏ

கடந்த ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னர் டிடிவி தினகரன் வீட்டுக்கு சென்று ஆதரவு வழங்கிய அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி சில நிமிடங்களுக்கு முன்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 
 
முதல்வருடன் எம்.எல்.ஏ ரத்தினசாமி என்ன பேசினார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை என்றாலும் தினகரன் அணிக்கு அவர் ஆதரவு தரவில்லை என்பது மட்டும் இப்போதைக்கு உறுதியாகியுள்ளது.
 
எனவே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை மீண்டும் 19ஆக மாறியுள்ளது. இந்த நிலையில் ஆட்சிக்கு எதிரான நடவடிக்கை எடுத்தால் 19 பேர்களும் தகுதிநீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.