செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 27 ஜனவரி 2018 (20:09 IST)

ஜீயர் பேசியது தவறு இல்லை, அவரை கோபப்படுத்தியது தான் தவறு: முட்டுக்கொடுக்கும் அதிமுக அமைச்சர்!

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜம் பேசியிருந்த சோடா பாட்டில் வீசத்தெரியும் என்ற பேச்சுக்கு கருத்து தெரிவித்த அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஜீயர் கோபப்படும் அளவுக்கு பிறர் பேசியது தான் தவறு என அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.
 
கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், உலகத்தில் இனி யாராவது மேடை போட்டுக் கடவுளை பற்றி பேசினால் நாம் அங்கு போக வேண்டும் என்றார்.
 
இத்தனை நாள் சாமியார்களெல்லாம் சும்மா இருந்தோம். எங்களுக்கும் கல் எறியவும் தெரியும்; சோடா பாட்டில் வீசவும் தெரியும். ஆனால், அதை செய்ய மாட்டோம். எதற்கும் துணிவோம் என ஆவேசமாக பேசியுள்ளார்.
 
எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத்தெரியும், கல் எறியத்தெரியும் என ஜீயர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
ஆனால் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இதுகுறித்து பேசியபோது, ஜீயர் கோபமாக பேசும் வகையில் இந்து கடவுளை விமர்சித்து பேசியது தவறு. பல பிரச்னைகள் இருக்கையில் வைரமுத்து, விஜயேந்திரர் குறித்து பேசுவது தேவையற்றது என்றார் அவர்.