Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நாட்டுப்புற பாடல் ஜன கன மன: திருப்பி விடப்பட்ட மு.க.ஸ்டாலின் பேச்சு!

Last Modified சனி, 27 ஜனவரி 2018 (18:03 IST)
செயல்தலைவரும் தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தேசிய கீதமான பாடலை நாட்டுப்புற பாடல் என தவறுதலாக கூறியதாக வீடியோ ஒன்று உலா வருகிறது. ஆனால் அவர் நாட்டுப்பண் பாடல் என சரியாகத்தான் கூறியுள்ளார்.
 
நாகை மாவட்டம் சீர்காழியில் திருமண விழாவில் கலந்துகொள்ள சென்ற திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் காஞ்சி சங்கர மடம் விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காதது குறித்து பேசினார்.
 
அப்போது பேசிய அவர், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காதவர் நாட்டுப்பண் பாடல் ஜன கன மன என பாடும் போது எழுந்துநிற்கிறார் என தவறாக கூறியதாக பிரபல தமிழ் செய்தி சேனல் மு.க.ஸ்டாலினின் பேச்சை திரித்து வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
 

நன்றி: News18
இந்த வீடியோவை முதல்முறை கேட்கும் போது அது நாட்டுப்புற பாடல் ஜன கன மன என ஸ்டாலின் கூறுவது போல தான் இருக்கும். ஆனால் திரும்ப திரும்ப கவனமாக கேட்கும் போது நாட்டுப்பண் பாடல் ஜன கன மன என ஸ்டாலின் சரியாக சொல்வது தெளிவாக கேட்கும்.


இதில் மேலும் படிக்கவும் :