கர்நாடக தேர்தல் : நோட்டோவை விட குறைவாக வாக்கு பெற்ற அதிமுக
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அதிமுக நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்றுள்ளது.
கடந்த 12ம் தேதி கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் துவங்கியது. அதில், துவக்கம் முதலே பாஜக முன்னிலை வகித்து வந்தது. ஒரு கட்டத்தில் 110க்கும் அதிமான இடத்தில் பாஜக முன்னிலை வகிக்க, அந்த கட்சியே ஆட்சி அமைக்கும் என்ற நிலை உருவானது. பாஜக 118, காங்கிரஸ் 58, மதசார்பற்ற ஜனதா தளம் 44 இடங்கள் என முன்னில இருந்தது. எனவே ஏறக்குறைய பாஜகவின் வெற்றி உறுதியானது.
ஆனால், ஆட்சி அமைக்க தேவையான 112 இடங்கள் பாஜகவிற்கு கிடைக்கவில்லை. மேலும், திடீர் திருப்பமாக, மஜத ஆட்சி அமைக்க காங்கிரஸ் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. காங்கிரஸின் முடிவை தேவகவுடாவும் ஏற்றுக்கொண்டார். எனவே, மஜத கட்சி கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதுஒருபுறம் இருக்க ஹனூர் தொகுதியில் அதிமுக போட்டியிட்டது. அக்கட்சியின் சார்பாக ஆர்.பி.விஷ்னுகுமார் என்பவர் போட்டியிட்டார். ஆனால், அவர் வெறும் 503 வாக்குகள் மட்டுமே பெற்றார். அந்த தொகுதியில் நோட்டோவிற்கு மட்டும் 1373 பேர் வாக்களித்தனர்.எனவே, அந்த தொகுதியில் அதிமுகவை விட 870 வாக்குகளை நோட்டோ பெற்றுள்ளது.
அந்த தொகுதியில் 60444 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார்.