Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இனி காங்கிரஸ் வேறு எங்கும் ஆட்சியமைக்க முடியாது - தமிழிசை

Tamilisai
Last Updated: செவ்வாய், 15 மே 2018 (14:12 IST)
கர்நாடகாவில் வெற்றியால் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கும் காவிரி பிரச்சனை இனி இரு மாநிலங்கள் இடையே இருக்காது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

 
நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பாஜகவின் வெற்றி உறுதியாகி உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் பாஜகவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 
தமிழக முதல்வர், துணை முதல்வர், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பாஜக வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை, கர்நாடகாவில் பாஜக வெற்றியால் இனி காவிரி பிரச்சனை இருக்காது என்று கூறியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
கர்நாடகாவில் பாஜக வெற்றியால தமிழகத்திற்கு நன்மை கிடைக்கும். எடியூரப்பா தலைமையிலான அரசு தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும். இனி இரு மாநிலங்கள் இடையே பிரச்சனை இருக்காது.
 
ஆட்சி செய்த மாநிலத்தை இழந்த காங்கிரஸ் இனி வேறு எங்கும் ஆட்சியமைக்க முடியாது. ராகுல் காந்தியின் பரப்புரை எடுபடவில்லை. பாஜகவிற்கு வாக்களித்த அனைத்து கன்னட மக்களுக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :