1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 15 மே 2018 (10:31 IST)

கூட்டணி அவசியமில்லை ; தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி : சதானந்த கவுடா பேட்டி

கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைபோம். எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க தேவையில்லை என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

 
நடைபெற்று முடிந்த கர்நாடக தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், தொடக்கம் முதலே பாஜக முன்னிலையில் வகித்து வந்தது. திடீரெனெ காங்கிரஸ் முன்னிலையில் இருந்தது. ஒருகட்டத்தில் காங்கிரஸும், பாஜகவும் மாறி மாறி முன்னிலையில் இருந்தன. 
 
தற்போதைய நிலவரப்படி பாஜக 109, காங்கிரஸ் 68, மஜத 43 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது.  
 
தொடக்கத்தில் காங்கிரஸை விட சில இடங்கள் மட்டும் அதிகமாக பெற்று முன்னிலை வகித்து வந்த பாஜக, தற்போது 41 இடங்கள் அதிகமாக பெற்று முன்னிலையில் இருக்கிறது. ஒரு கட்டத்தில் மஜத கட்சியின் ஆதரவு இருந்தால், பாஜகவே கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் என்கிற நிலை ஏற்பட்டது. 
 
ஆட்சி அமைக்க 112 இடங்கள் வேண்டும் என்கிற நிலையில், ஏறக்குறைய 110 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. எனவே, மதசார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவை பெற வேண்டிய சூழ்நிலை பாஜகவிற்கு தற்போது இல்லை. செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா “ஆட்சி அமைக்க தேவையான இடங்களை பெற்று நாங்கள் முன்னிலையில் இருக்கிறோம். எனவே, மஜத-வுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க வேண்டிய சூழ்நிலை இல்லை” என தெரிவித்தார்.