தாய் சொன்ன அந்த வார்த்தை: விரக்தியில் இளம்பெண் தற்கொலை
பொள்ளாச்சியில் பெண் ஒருவர் தனது தாய் திட்டியதால் தற்கொலை செய்துகொண்டார்.
இன்றைய தலைமுறையினருக்கு சாப்பாடு எவ்வளவு அத்தியாவசமோ, செல்போனும் அவ்வளவு அத்தியாவசம் ஆகிவிட்டது. சாப்பிடும் போது செல்போன், தூங்கும் போது செல்போன், பாத்ரூம் போகும்போது கூட செல்போன் அப்படி மாறிவிட்டது இந்த காலகட்டம்.
பொள்ளாச்சி வெங்கடேசா காலனியை ஜீவிதா நிலாசினி என்ற இளம்பெண் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவர் நேற்று வீட்டில் வெகு நேரம் செல்போன் உபயோகித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது தாய் ஜீவிதாவை கடுமையாக கண்டித்துள்ளார். மேலும் அவர் ஜீவிதாவிண்டம் இருந்து செல்போனை பறித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரது தாய் வெளியே சென்றுவிட்டார்.
தாய் திட்டியதால் மனமுடைந்த ஜீவிதா ஒரு பிளேடால் கை நரம்பை அறுத்துக்கொண்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருந்தபோதிலும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.