ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (14:26 IST)

வாங்கிய கடனுக்காக மகளை பாலியல் தொழிலில் தள்ளிய கொடூரத் தாய்.! சென்னையில் பயங்கரம்..!!

Child Abuse
வாங்கிய கடனுக்காக தனது 16 வயது மகளை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த தாய் உள்பட ஆறு பேரை போக்சோ பிரிவில் போலீசார் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
சென்னையைச் சேர்ந்த தாய் ஒருவர், கணவனைப் பிரிந்து தனது மகளுடன் தனியே வாழ்ந்து வந்துள்ளார். பின்னர் குடும்ப சூழல் காரணமாக தனது மகளைப் பள்ளியில் இருந்து நிறுத்தியதாக சொல்லப்படுகிறது. குடும்பம் நடத்த பணம் இல்லாததால்,  அதே பகுதியைச் சேர்ந்த பாலியல் புரோக்கரான முத்து லட்சுமி என்பவரிடம்  40 ஆயிரம் ரூபாய் பணத்தை வட்டிக்கு வாங்கியுள்ளார்.

அவரால் சொன்ன தேதிக்கு பணத்தை திரும்ப கொடுக்க முடியாததால் பணத்திற்கு பதிலாக தனது 14 வயது மகளை முத்துலட்சுமியிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. வேலைக்குச் செல்வதாக நினைத்து சென்ற சிறுமிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சிகள் காத்திருந்துள்ளன. கடந்த 2021ம் ஆண்டு தொடங்கி 2023 ஆம் ஆண்டு வரை முத்துலட்சுமி, சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார்.
 
இதனையடுத்து சென்ற ஆண்டு சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவர் முத்துலட்சுமியின் வீட்டில் இருந்து தப்பித்து தனது தாயை நாடிச் சென்றுள்ளார். ஆனால், கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் தனது மகளை அழைத்துச் சென்று மீண்டும் முத்துலட்சுமியிடமே  ஒப்படைத்துள்ளார். 
 
அங்கிருந்து மீண்டும் தப்பித்த அச்சிறுமி, உறவினர் ஒருவர் உதவியுடன் கடந்த 8 மாதங்களாக மணலி பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சிறுமியைத் தொடர்பு கொண்ட அவரது தாய் மீண்டும் அவரை முத்துலட்சுமியிடம் செல்லுமாறு கட்டாயபடுத்தியுள்ளார். 

 
இதனால் மனமுடைந்த சிறுமி இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியின் தாய், பாலியல் புரோக்கர் முத்துலட்சுமி (32), முத்துலட்சுமியின் கணவர் நிஷாந்த் (37), அஜித் குமார் (20), கிஷோர்(22), மகேஸ்வரன்(24) ஆகிய ஆறு பேரை போக்சோ பிரிவில் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.