புதன், 4 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 14 நவம்பர் 2024 (08:06 IST)

சொர்க்கத்தில் இருந்து இந்திரா காந்தி வந்தாலும் காஷ்மீருக்கு 370வது பிரிவு கிடைக்காது: அமித்ஷா

Amitshah
சொர்க்கத்தில் இருந்து இந்திரா காந்தி நேரடியாக வந்தால் கூட, காஷ்மீருக்கு சிறப்பு சட்டம் வழங்கும் 370வது பிரிவை கொண்டு வர முடியாது, என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் இருபதாம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஆவேசமாக பேசினார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், முஸ்லிம் சமுதாயத்தினர் காங்கிரஸ் தலைவரை சந்தித்ததாகவும், அப்போது கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கூறியதாகவும், காங்கிரஸ் கட்சியும் இதற்கு ஒப்புக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் நான்கு தலைமுறையினர் வந்தாலும், இந்த இட ஒதுக்கீட்டை பறித்து, முஸ்லிம்களுக்கு வழங்க முடியாது என்றும் அவர் உறுதி செய்தார். அதேபோல், சொர்க்கத்திலிருந்து இந்திரா காந்தி வந்தாலும், காஷ்மீர் சிறப்பு சட்டத்தை மீண்டும் கொண்டு வர முடியாது என்றும், 370வது பிரிவை மீண்டும் கொண்டுவர முடியாது என்றும் அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Siva