வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 10 ஜூன் 2019 (09:51 IST)

பைக்கில் சென்றவர்களை மோதி சென்ற கார்: பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

தாம்பரம் அருகே வேகமாக வந்த கார் ஒன்று தடுப்பை உடைத்துக் கொண்டு பைக்கில் சென்று கொண்டிருந்தவர்களை மோதி வீசி எறிந்து விட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் அருகே உள்ள நெடுஞ்சாலையில் வாகனங்களின் வேகத்தை குறைப்பதற்காக தற்காலிக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் வேகமாக வந்த சிவப்பு நிற கார் ஒன்று கட்டுபாடில்லாமல் வந்து தடுப்பு பலகையை மோதியது. பின்னர் பைக்கில் சென்று கொண்டிருந்த சிலரை மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

அக்கம்பக்கத்திலிருந்த மக்கள் உடனடியாக காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். இரண்டு இளைஞர்கள், ஒரு தம்பதியினர் இதில் பலத்த காயம் அடைந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக அந்த பகுதி போக்குவரத்து துறையின் சிசிடிவி கேமராவை ஆராய்ந்தபோது மோதி சென்ற காரின் பதிவெண்ணை கண்டுபிடித்தனர். அதை வைத்து அந்த காரை ஓட்டி சென்ற வரதன் என்கிற நபரை போலீஸார் கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர்.