1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 8 ஜூன் 2019 (16:31 IST)

மானம் போச்சு...செல்போன் திருடிய ’நடிகரை’ பிடித்த ஊழியர்கள்...

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஒரு செல்போன் கடைக்குள் நுழைந்த துணைநடிகர் ஒருவர், அங்குள்ள செல்போனைத் திருடினார். இதைப்பார்த்த ஊழியர்கள் அவரைக் கையும் களவுமாகப் பிடித்து போலீஸில் ஒப்படைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பிரபல செல்போன் கடையில் ஜமென்று டிரஸ் அணிந்து வந்த ஒருவர், தனது மனைவியுடன் வந்தார். அங்கி வைத்திருந்த விலையுயர்ந்த செல்போன்களை அவர்  வாங்குவதைப்போலப் பார்த்துக்கொண்டிருந்தார்.
 
அந்த சமயத்தில் ஊழியர்கள் சிறுது கவனத்தை இழந்த போது, அவர் தனது வேலையைக்காட்டி விலை உயர்ந்த போன்களைத் திருடி பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டார்.இந்தக் காட்சிகள் கடைக்குள் இருந்த கேமராவில் பதிவாகி இருந்தது.
 
பின்னர் இதை கேமராவில் பார்த்துக்கொண்டிருந்த கடை ஊழியர்களான தேவராஜ், சுரேஷ் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். சுதாரித்த இருவரும் அந்த வாலிபரைப் பிடித்து அரும்பாக்கத்தில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
 
அதன்பின்பு போலீஸார் அந்த வாலிபரிடம் விசாரித்தனர். அதில் , நெற்குன்றத்தில் வசித்துவருவதாகவும், தனது ஆருண் தீபக் (28)என்று தெரிவித்தார். விஷூவல் கம்யூனிகேஷன் படித்துவிட்டு தொலைக்காட்சி தொடர்களில் துணைநடிகராக இருப்பதும் தெரியவந்தது.
 
மேலும் அவரிடம் போலீஸார் விசாரித்த போது, இதுபோலப் பல கடைகளுக்குச் சென்று விலை உயர்ந்த போன்களை திருடுவதை வாடிகையாக கொண்டிருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
 
தற்போது ஆருணை கைதுசெய்துள்ள போலிஸார் அவரை சிறையில்  அடைத்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.