திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 26 மே 2022 (19:43 IST)

பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வைத்த 5 கோரிக்கைகள்!

modi stalin
இன்று சென்னை வந்த பிரதமர் மோடியிடம் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் ஐந்து முக்கிய கோரிக்கைகளை வைத்துள்ள 
 
1. மீனவ சமுதாய மக்களின் முக்கியப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கச்சத்தீவை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் 
 
2. மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களில் தொடக்கத்தில் கொடுக்கும் திட்டத்தின் பங்கை திட்டம் முடியும் வரை தொடர வேண்டும் 
 
3. மாநிலத்திற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் 
 
4. இந்திக்கு இணையாக தமிழை அலுவல் மொழியாகவும் உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் கொண்டுவரவேண்டும்
 
5. நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு அனுமதியை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்