1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 26 மே 2022 (15:26 IST)

உதயநிதி முதல்வர் மு.க.ஸ்டாலினையே மிஞ்சி விடுவார்! – அமைச்சர் பொன்முடி புகழாரம்!

Ponmudi
விழுப்புரத்தில் திமுக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் உதயநிதியை அமைச்சராக்குவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு உதயநிதி ஸ்டாலின் வெற்றிபெற்று எம்.எல்.ஏவாக உள்ளார். இந்நிலையில் அவரை அமைச்சராக்க வேண்டும் என திமுகவிற்குள்ளேயே தொடர்ந்து குரல்கள் ஒலித்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கலைஞரின் 99வது பிறந்தநாளை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து பேசிய அமைச்சர் பொன்முடி “அடுத்த தலைமறைக்கு திமுகவின் இயக்க கொள்கைகளை எடுத்து செல்ல  கருணாநிதிக்கு அடுத்து ஸ்டாலின் செயல்படுவது போல உதயநிதி ஸ்டாலின் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை மிஞ்சி செயல்படுவார் என்பதில் வேறுபட்ட கருத்து இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.