திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 2 ஜூன் 2021 (15:46 IST)

புதுவை 3 நியமன உறுப்பினர்கள் வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

புதுவையில் நியமனம் செய்யப்பட்ட மூன்று எம்எல்ஏக்களின் நியமனம் செல்லாது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்த பொதுநல வழக்கில் தீர்ப்பு சற்று முன் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது 
 
புதுவையில் சமீபத்தில் பாஜக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் 3 நியமன எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமித்தது. இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுநல வழக்கு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் சற்று முன் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியான நிலையில் புதுமையில் நியமனம் செய்யப்பட்ட மூன்று எம்எல்ஏக்களை நியமனம் செல்லும் என்று  சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்து உள்ளது. இந்த தீர்ப்பு பாஜகவுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்பட்டது. இன்றைய தீர்ப்பில் 3 நியமன உறுப்பினர்கள் நியமனம் செல்லாது என்று தீர்ப்பு வரும் என்று பல எதிர்க்கட்சிகள் தெரிவித்திருந்த நிலையில் தற்போது பாஜகவுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.