திங்கள், 30 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 1 ஜூன் 2021 (16:43 IST)

கோலி விரித்த வலையில் ஜேமிசன் சிக்கவில்லை… டிம் சவுத்தி பாராட்டு!

ஐபிஎல் தொடரின் போது கோலி கைல் ஜேமிசனுக்கு டியுக் பந்தால் வீச மறுத்தது சிறப்பான முடிவு என டிம் சவுதி கூறியுள்ளார்.

நியுசிலாந்து அணியின் இளம் ஆல்ரவுண்டர் கைல் ஜெமிசன் பெங்களூர் அணிக்காக ஐபிஎல் விளையாடி வருகிறார். இந்நிலையில் வலைப்பயிற்சியின் போது கோலி தனக்காக பந்துவீச கேட்ட போது ஜேமிசன் அதை மறுத்துள்ளாராம். அதற்குக் காரணம் இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் நடக்க உள்ளது. அதனால் தன்னுடைய சூட்சுமங்களை கோலி டீகோட் செய்துவிடுவார் என்று அஞ்சி மறுப்பு தெரிவித்தாராம் ஜேமிசன். இதை சக வீரரான கிறிஸ்டியன் தெரிவித்துள்ளார்.

இதைப்பற்றி இப்போது பேசியுள்ள நியுசிலாந்தின் முன்னணி பந்துவீச்சாளர் டிம் சவுத்தி ‘அந்த சம்பவம் உண்மைதான். கோலி கேட்டதும் எந்த சிரமும் இல்லாமல் அதற்கு ஜேமிசன் மறுத்தார். அத்தனைக்கும் அவரிடம் டியுக் பந்துகள் இருந்தன. கோலி நாசூக்காக விரித்த வலையில் விழாமல் ஜேமிசன் தப்பித்துவிட்டார்’ எனக் கூறியுள்ளார்.