புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: திங்கள், 27 ஏப்ரல் 2020 (20:48 IST)

24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட்ஸ்கள் திருப்பி அனுப்படும் – அமைச்சர் விஜய பாஸ்கர் !

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்ட இரண்டு சீன நிறுவனங்களிடமிருந்தும் 5.5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்றும், அவற்றை வாங்கிய நிறுவனத்திடமே திருப்பி அளித்துவிடவும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் ரேபிட் டெஸ்ட் கருவிகளுக்கு பதிலாக RT-PCR டெஸ்ட் கருவிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தியது.

இதையடுத்து, தற்போது அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது :

ஐ.சி.எம்.ஆர் ஆணையின்படி தமிழக அரசு பெற்றுள்ள 24 ஆயிரம் ரேபிட்ல் டெஸ்ட் கிட்கள் திருப்பி அனுப்பப்படுகிறது. இதில் தமிழக அரசுக்கு எந்தவித செலவும் ஏற்படவில்லை. மேலும் மீதமுள்ள அனைத்து கொள்முதல் ஆணைகளும் ரத்து செய்யப்படுகிறது  என தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுச்சொத்தான கருவூலத்தை கரையான் அரிக்கும் காரியம் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பது ஒரு பொய்பிரசாரத்தின் வெளிப்பாடு. மக்களின் உயிர்காக்கும் அரசை பார்த்து ரூ.600 கொடுக்காதது ஏன் எனக் கேட்டுள்ளது ஏன் எனக் கேட்டுள்ளார். இதுபோன்ற குற்றச்சாட்டுகளை திமுகம் தலைவர் விட்டுவிட வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.