வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (07:21 IST)

ஊரடங்கு கெடுபிடியால் தீக்குளித்து பலியான 24 வயது இளைஞர்: அதிர்ச்சித் தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவை கடந்த சில நாட்களாக போலீசார் கடுமையாக கடைபிடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக 24 வயது இளைஞர் ஒருவர் திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் போலீசார் ஊரடங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அந்த வழியாக விஜயகுமார் என்ற 24 வயது இளைஞர் இருசக்கர வாகனத்தில் வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை செய்தபோது அவர் தகுந்த காரணங்களுக்காக வெளியே வரவில்லை என்றும் சும்மா ஊரைச் சுற்றுவதற்காக வந்ததும் தெரியவந்தது 
 
இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரது வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். தன்னுடைய வாகனத்தை திருப்பி தரும்படி அந்த இளைஞர் எவ்வளவோ கெஞ்சியும் போலீசார் திருப்பி தரவில்லை. இதனால் மனமுடைந்த அந்த வாலிபர் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
இதனை அடுத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இருப்பினும் அவரது உடலில் 75 சதவீதம் தீக்காயம் இருந்ததால் பரிதாபமாக பலியானார். கொரோனா வைரஸ் காரணமாக ஏற்கனவே உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கும் நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக கேரள வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.