1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 21 ஜூலை 2023 (19:52 IST)

கூடங்குளம் போராட்டம்: 18 பேருக்கு 7 ஆண்டு சிறை! 3 பேர் விடுவிப்பு

kudangulam
நெல்லை கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் தொடர்பாக 22 பேர் மீதான வழக்கில் இருந்து சுப. உதயகுமார், புஷ்பராயம், சேசுராஜன் ஆகியோரை வள்ளியூர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டது.

கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டம் தொடர்பாகக அதிமுக ஆட்சியின்போது, ஆயிரத்திற்கும் அதிகமானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கூடங்குளம் அணுமின்  நிலைய போராட்டக் காரரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட  349 வழக்குகளில் இருந்து 259 வழக்குகள் அரசால் ரத்து செய்யப்பட்ட நிலையில்,  இப்போராட்டம் தொடர்பான வழக்கில் 18  பேருக்கு7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து வள்ளியூர் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.