திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 21 ஜூலை 2023 (17:59 IST)

தமிழ்நாட்டுக்கு கண்டிப்பாக தண்ணீரை திறந்து விடுவோம்: கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்

TK Sivakumar
கர்நாடக மாநிலத்தின் தேவை போக மீதம் உள்ள தண்ணீரை கண்டிப்பாக தமிழகத்திற்கு திறந்து விடுவோம் என கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி கே சிவக்குமார் தெரிவித்துள்ளார். 
 
ஜூன் மாதம் தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக மாநிலம் இன்னும் தரவில்லை என அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் இது குறித்து டெல்லி சென்று அவர் மத்திய அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 
 
இந்த நிலையில்  கர்நாடக மாநிலத்திற்கு குடிநீர் தேவைக்கான நீரை வைத்துக்கொண்டு மீதமுள்ள தண்ணீரை கண்டிப்பாக தமிழ்நாட்டுக்கு திறந்து விடுவோம் என கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார். மேலும் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட ஆணையம் உத்தரவு பிறப்பித்தால் அதை நிச்சயம் மதிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்
 
Edited by Mahendran