வியாழன், 23 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 21 ஜூலை 2023 (19:13 IST)

ஆடி மாதத்தில் சுபகாரியங்கள் நடத்தாதது ஏன்?

Aadi Velli
ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உரிய மாதம் என்பதால் முழுக்க முழுக்க இறைவனுக்கு ஒதுக்கப்பட்ட மாதம் என்பதால் இந்த மாதத்தில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
அனைத்து தமிழ் மாதங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு இருந்தாலும் ஆடி மாதம் பல்வேறு வகைகளில் சிறப்பு வாய்ந்த ஒரு மாதமாகும். ஆடி மாதம் முழுவதும் அனைத்து கிராமங்களில் உள்ள அம்மன் கோவிலில் விசேஷங்கள் திருவிழாக்கள் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவதுண்டு. 
 
இதனால் தான் ஆடி மாதத்தில் திருமணம் புதுமனை புகுதல் உள்பட எந்த விதமான சுப நிகழ்ச்சிகளும் நடத்துவதில்லை.  ஆடி மாதம் புதிதாக திருமணமான தம்பதிகளை பிரித்து வைப்பார்கள் அதற்கு முக்கிய காரணம் ஆடி மாதம்  தம்பதிகள்  கூடி கர்ப்பமாக ஏற்பட்டால் சித்திரை மாதம் குழந்தை பிறக்கும்
 
சித்திரை மாதம் என்பது கடும் வெயில் காலம் என்பதால் பிரசவம் கடினமாக இருக்கும் என்றும், அதனால் தான்  ஆடி மாதம் தம்பதிகள் பிரித்து வைத்து இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
ஆடி மாதத்தில் எந்தவித விசேஷமும் செய்வதில்லை என்றாலும் ஆடி 18 ஆம் தேதி மற்றும் விதிவிலக்காக அன்றைய தினம் மட்டும் திருமணம் உள்பட பல்வேறு விசேஷங்கள் செய்யப்படுவதுண்டு என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran