வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 23 மார்ச் 2018 (08:30 IST)

கஷ்டமான கணித தேர்வு: சென்னையில் 11ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

இந்த கல்வியாண்டு முதல் 11ஆம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு என தமிழக அரசு அறிவித்துள்ளதை அடுத்து கடந்த சில நாட்களாக 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் 11ஆம் வகுப்பிற்கான கணித தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் கடினமான கேள்விகள் கேட்கப்பட்டதாக மாணவர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் சென்னையில் உள்ள செங்குன்றம் பகுதியில் கணிதத் தேர்வை சரியாக எழுதவில்லை என்று 11ம் வகுப்பு மாணவி ஒருவர் க்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது. தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெயர் சர்மிளா என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில்  11ம் வகுப்பு கணித பொது தேர்வு மிகவும் கடினமாக இருந்ததால் அதற்கு கூடுதல் மதிப்பெண் வழங்குமாறு மணவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதுகுறித்து அரசு பரிசீலிக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்திருந்த நிலையில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் 11ம் வகுப்பு பாடத்திட்டத்தை தவிர்த்து 12ம் வகுப்பு பாடங்களையே 11ஆம் வகுப்பிலும் நடத்தப்பட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் இந்த ஆண்டு முதல் 11ஆம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு நடத்த அரசு முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.