1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 21 மார்ச் 2018 (18:19 IST)

டிஜிபி அலுவலகத்தில் காவலர்கள் தீக்குளிக்க முயற்சி - சென்னையில் பரபரப்பு

டிஜிபி அலுவலகத்தில் ஆயுதப்படை காவல் அதிகாரிகள் இரண்டு பேர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தேனி மாவட்டத்தை சேர்ந்த ரகு, கணேஷ் என்ற ஆயுதப்படை காவலர்கள் எந்தவொரு தவறும் செய்யாமல் பணியிடை மாற்றம் செய்யப்படுவதாக கூறி டிஜிபி அலுவகத்தில் மனு கொடுக்க வந்தனர்.
 
அந்த மனுவில் தேனியில் ஆயுதப்படை அதிகாரிகளாக பணிபுரியும் நாங்கள் அங்குள்ள உயரதிகாரிகளால் சாதிரீதியாக ஓதிக்கி வைக்கப்பட்டு, பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளோம் என கூறியிருந்தனர்.
 
இந்நிலையில், திடிரென டிஜிபி அலுவலகம் முன் அந்த இரண்டு காவலர்களும் தீக்குளிக்க முயற்சித்தனர். அப்போது அவர்களை சக காவலர்கள் தடுத்த நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.