திங்கள், 2 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sasikala

முட்டை மக்ரோனி செய்ய...!!

தேவையான பொருட்கள்:
 
மக்ரோனி - 1 கப்
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 10
முட்டை - 2
கேப்ஸிகம் - 1
மிளகுத்தூள் - 1/4 ஸ்பூன்
சில்லி சாஸ் - 1 ஸ்பூன்
சோயா சாஸ் - 1/4 டீஸ்பூன்
டொமட்டோ கெட்செப் - 2 ஸ்பூன்
செய்முறை:
 
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து நன்கு கொதிக்க விடவும். கொதித்த தண்ணீரில் மக்ரோனி சேர்த்து வேகவைத்து எடுக்கவும். குழைய விட  கூடாது.
 
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு விழுது சேர்க்கவும். பிறகு குடைமிளகாய் சேர்க்கவும். மிளகாய் சிறிது வெந்ததும் அதனோடு  சில்லி சாஸ், சோயா சாஸ் முட்டை சேர்த்து கிளரவும். முட்டை முக்கால் பாகம் வெந்ததும் மக்ரோனி சேர்த்து கிளறவும். கடைசியில்  டொமட்டோ கெட்செப் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.