வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By

நெத்திலி மீன் தொக்கு செய்ய...!

தேவையான பொருட்கள்:
 
நெத்திலி மீன் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 1/2 கிலோ
பச்சை மிளகாய் - 6 எண்ணிக்கை
மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தனியாத் தூள் - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 6 பல்
கறிவேப்பிலை - ஒரு கீற்று
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கடுகு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
புளி - நெல்லிக்காய் அளவு
தேங்காய்பால் - கால் கப்
உப்பு - தேவையான அளவு 
செய்முறை:
 
நெத்திலி மீனை சுத்தம் செய்து கொள்ளவேண்டும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், சீரகம் போட்டு சிவந்ததும் பூண்டை தட்டி போடவும். சிறிது வதங்கியதும், வெங்காயம் போட்டு வதக்கவும்.
பிறகு தக்காளி போட்டு வதக்கி, பச்சை மிளகாய், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தனியாத் தூளை சேர்த்து நன்கு வதக்கவும். புளித்தண்ணீரை சேர்த்து கொதிக்க விட்டு பின்னர் நெத்திலி மீனையும், தேங்காய் பாலையும் சேர்க்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து, திக்காக  வந்ததும் கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும்.
 
குறிப்பு:
 
நெத்திலிமீனில் உள்ள முள்ளை எடுத்து விடுவது நல்லது. அல்லது அப்படியே போட்டும் செய்யலாம்.