1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By

சுவையான முட்டை தொக்கு செய்ய....!

தேவையானவை: 
 
வேக வைத்த  முட்டை -  3
சின்ன வெங்காயம் -  15
காய்ந்த மிளகாய்  - 10
தேங்காய் எண்ணெய்  - 4  ஸ்பூன்
உப்பு -  அரை  ஸ்பூன்
மல்லி இலை  - சிறிதளவு 
செய்முறை: 
 
வெங்காயம், உப்பு, காய்ந்த மிளகாய் ஆகிய மூன்றையும் நன்கு அரைத்து கொள்ள வேண்டும். ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி,  அரைத்த மசாலாவை நன்கு சுருள வதக்கவும்.
வேகவைத்த முட்டையை மேலும், கீழும் கீறிவிட்டு, வதக்கிய மசாலாவில் போட்டு நன்கு கிளர வேண்டும். முட்டையில் மசாலா நன்கு சேர்ந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். இது கேரளா ஸ்டைல் முட்டை தொக்கு. இவை சாம்பார் சாதத்துடன் சாப்பிட சுவையாக  இருக்கும்.