1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By

கார்ன் முட்டை சூப் செய்ய...!

தேவையான பொருட்கள்:
 
மக்கா சோளம் - 500 கிராம்
சோள மாவு - 2 மேசைக்கரண்டி
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
பால் - 1 கப்
வெஜிடபிள் ஸ்டாக்கியூப் - 1
பட்டர் - 1 ஸ்பூன்
தண்ணீர் - 1/4 லிட்டர்
உப்பு, மிளகுப் பொடி - தேவையான அளவு
வெங்காயத் தாள் - சிறிதளவு
முட்டை - 2
செய்முறை:
 
வெங்காயம், பச்சை மிளகாய், வெங்காயத் தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும். சோளத்தை வேகவைத்து ஆறியதும் உதிர்த்து கொள்ளவும்.
 
முட்டையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும். ஒரு கைப்பிடி சோளத்தைத் தனியாக எடுத்து வைத்துக் கொண்டு மீதியை மிக்ஸியில் அரைத்து தண்ணீருடன் கலந்து வைத்துக் கொள்ளவும். இதில் பாலையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
 
ஒரு பாத்திரத்தில் பட்டரைச் சூடாக்கி ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து பச்சை மிளகாய் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். சிறுந்தீயில் வைத்து சோள மாவை  அதனுடன் சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.
 
சோள மாவை 2 மேசைக்கரண்டி பால் விட்டு கரைத்து விடவும். இதனுடன் தனியாக எடுத்து வைத்துள்ள மக்காசோளத்தையும் சேர்த்து வதக்கவும். சூப் நன்கு கொதித்து வந்தவுடன் அதில் உப்பு, மிளகுப் பொடி உதிர்த்த வெஜிடபிள் ஸ்டாக்கியூப் சேர்த்து நன்கு கலக்கவும்.
 
சூப் நன்கு கொதித்தவுடன் அடித்து வைத்துள்ள முட்டையை சேர்த்து, கொதி வந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயத் தாளை தூவி சூடாகப் பரிமாறலாம்.