புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By

அருமையான சுவையில் இறால் வடை செய்ய...!!

தேவையான பொருட்கள்:
 
இறால் - 1 கப்
தேங்காய் துருவியது - 1 கப்
இஞ்சி -  ஒரு துண்டு
பச்சை மிளகாய் - 4
உப்பு -  தேவைக்கு ஏற்ப
வெங்காயம் - 1/2 கப்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
 
தேங்காய் துருவல், இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
 
இறால்களை சுத்தம் செய்தபின் அரைத்து கொள்ளவும். அரைத்து வைத்த மசாலாவை இதனுடன் கலக்கவும். உப்பு மிளகுதூள் சேர்த்து வடைகளாக தட்டி, எண்ணெயில் பொரித்தெடுத்தால் சுவையான இறால் வடை தயார்.