திங்கள், 2 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sasikala

முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா..?

தேவையான பொருட்கள்:
 
பெரிய வெங்காயம் - 3 
கடைந்த தயிர் - 1 கப்
எண்ணெய் - அரை கப்
நெய் - கால் கப்
உப்பு - 2 டீஸ்பூன் 
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 4 டீஸ்பூன்
 
அரைக்க தேவையான பொருட்கள்:
 
பட்டை - 2
லவங்கம் - 2
ஏலக்காய் - 6
பச்சை மிளகாய் - 5 
புதினா - ஒரு கைப்பிடி 
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி

 
செய்முறை:
 
* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். அரிசியைக் நன்றாக கழுவி ஊறவிடவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள்.
 
* முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் விட்டு, கால் டீஸ்பூன் உப்பு, அரைத்த மசாலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு துளி சேர்த்து அடித்து வையுங்கள். அடித்த முட்டையை குழிப்பணியார சட்டியில் பணியாரம் போல் ஊற்றி சுட்டெடுங்கள். ஆறிய பிறகு சிறிய துண்டுகளாக வெட்டுங்கள்.
 
* அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் விட்டு சூடானதும் வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த மசாலா, தக்காளி, தயிர், மஞ்சள் தூள், உப்பு போட்டு சுருள சுருள வதக்கவும்.
 
* எண்ணெய் கக்கி வரும் போது, ஒரு கப் வெந்நீர் விட்டு தளதளப்பாக இருக்கும் போது முட்டையை போட்டு கிளறி  கொதிக்கவிடுங்கள்.
 
* இன்னொரு அடுப்பில், ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து, ஊறவைத்த அரிசியை உப்பு போட்டு, அரைப்பதமாக வேகவிட்டு வடித்து, கொதிக்கும் முட்டை கலவையில் போட்டு கிளறி ‘தம்’ போட்டு வெந்ததும் இறக்கி பரிமாறவும். சூப்பரான முட்டை  பிரியாணி தயார்.