வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (08:58 IST)

விடாத கருப்பாய் தொடரும் எதிர்ப்பு: 2வது நாளாக டிடெண்டிங்கில் #ZomatoUninstalled!!

விடாத கருப்பாய் சொமேட்டோ நிறுவனம் மீது சமூக வலைத்தளங்களில் 2வது நாளாக எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. 
 
இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் முதன்மையனாவை சொமேட்டோ மற்றும் ஊபர் ஈட்ஸ். சில நாட்கள் முன்பு சொமேட்டோவில் வாடிக்கையாளர் ஒருவர் உணவு ஆர்டர் செய்தபோது அதை டெலிவரி செய்ய ஒரு இந்து அல்லாதவர் சென்றிருக்கிறார். 
 
அதை வைத்து பிரச்சினை செய்த அந்த வாடிக்கையாளருக்கு “உணவுக்கு மதம் ஏதும் இல்லை” என்று அதிரடியான பதிலை தந்தது சொமேட்டோ. இதற்கு ஊபர் ஈட்ஸ் அதரவு தெரிவித்தது. இதனால் கடுப்பான பலர் சொமேட்டோ மற்றும் ஊபர் ஈட்ஸ் செயலிகளை அன் இன்ஸ்டால் செய்து வருகின்றனர். 
மேலும், இவ்விறு நிறுவனங்களுக்கு எதிராக டிவிட்டரில் ஹேஸ்டேக்குகளை டிரெண்டாக்கி வருகின்றனர். நேற்று துவங்கிய இந்த டிரெண்டிங் 2வது நாளாக இன்ரும் தொடர்கிறது. ஆம், டிவிட்டரில் #ZomatoUninstalled, #ZomatoExposed ஆகியவை டிரெண்டாகும் நேரத்தில் சொமேட்டோவிற்கு ஆதரவாக #ZomatoSaysNoToHate என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டகை வருகிறது.