வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (07:27 IST)

ஜொமைட்டோ விவகாரம்: ஆயிரக்கணக்கானோர் அன்-இஸ்டால் செய்து வருவதால் பரபரப்பு

நேற்று ஜொமைட்டோ உணவு சப்ளை செய்யும் நிறுவனத்தின் மூலமாக உணவு ஆர்டர் செய்த ஒரு வாடிக்கையாளர் தன்னுடைய உணவை ஒரு இந்து மட்டுமே சப்ளை செய்ய வேண்டும் என்று கூறியதை அடுத்து, அவருக்கு பதிலடி கொடுத்த ஜொமைட்டோ நிறுவனம் உணவில் மதம் கிடையாது என்றும் உணவே ஒரு மதம் என்றும் பதிலளித்தது. இந்த பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாலும் அதன் விளைவு அந்நிறுவனத்திற்கு எதிராக தற்போது திரும்பியுள்ளது
 
தனது உணவை ஒரு இந்து மட்டுமே சப்ளை செய்ய வேண்டும் என்று கூறிய வாடிக்கையாளர் கருத்தை சரி என்று பலர் கூறவில்லை. இருப்பினும் இந்த விவகாரத்தை ஜொமைட்டோ பெரிதுபடுத்தி இருக்கக் கூடாது என்றும், உணவில் மதம் கிடையாது என்பது உண்மையா? என்றும் பலர் கேள்வி எழுப்புகின்றனர் 
 
ஹலால் உணவு , சீக்கியர்களுக்கு ஹலால் செய்யப்படாத உணவு என பல்வேறு விதமாக உணவு வகைகளை பிரித்து விற்பனை செய்துவரும் ஜொமைட்டோ, உணவில் மதம் கிடையாது என்று எப்படி சொல்லலாம்? என்று பல டுவிட்டர் பயனாளிகள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் ஜொமைட்டோ நிறுவனத்தின் இந்த போக்கை கண்டித்து பலர் அந்த நிறுவனத்தின் செயலிகளை அன்இன்ஸ்டால் செய்து வருவதாகவும் தங்களது டுவிட்டர் பக்கத்தில்  குறிப்பிட்டு உள்ளனர் 
 
இந்து மட்டுமே உணவு டெலிவரி செய்ய வேண்டும் என்ற வாடிக்கையாளருக்கு எங்களது ஆதரவு இல்லை என்றும், இருப்பினும் ஜொமைட்டோ நிறுவனத்தின் பதில் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இல்லை என்றும், உணவில் மதம் கிடையாது என்பது உண்மை எனில் ஜொமைட்டோ இணையதளத்தில் உள்ள ஹலால் உணவிற்கான ஹோட்டல்கள் பட்டியலை நீக்க சொல்லுங்கள் என்று பலர் டுவீட்டுக்களை பதிவு செய்து  வருகின்றனர் 
 
இது குறித்து தனது கருத்தை தெரிவித்தார் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் 'நான் இதுவரை ஆன்லைனில் ஆர்டர் செய்தது இல்லை. ஆனால் இனிமேல் ஜொமைட்டோ மூலம் உணவு ஆர்டர் செய்ய விரும்புகிறேன் என்று டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இவரது பதிவிற்கும் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உங்களுக்கு விரைவில் திகாரில் ஜொமைட்டோ உணவு சப்ளை செய்யும் என்ற கிண்டலான பதிவுகளும் அதில் உள்ளது
 
ஜொமைட்டோ நிறுவனத்தின் ஒரே ஒரு டுவீட் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது