மன்மோகன் சிங் மறைவு: நேரில் அஞ்சலி செலுத்த டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் நேற்று காலமான நிலையில், அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
வயது மூப்பு காரணமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று இரவு காலமானார். அவருடைய உடல், அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் பிரபலங்கள் மற்றும் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று அவரது உடல் வைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் மன்மோகன் சிங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, தமிழக முதல்வர் தனது சமூக வலைத்தளத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைவால் மிகுந்த வருத்தமடைந்துள்ளேன். அன்னாரது அறிவாற்றலும், தலைமைத்துவமும் இந்தியாவின் பொருளாதார மாற்றத்தை வழிநடத்தி சென்றது. அன்னாரது பதவிக்காலத்தில் கோடிக்கணக்கானோரின் வாழ்க்கையில் நிலையான வளர்ச்சி, சமூக மேம்பாடு, சீர்திருத்தங்களைக் கொண்டு வரப்பட்டது எனப் பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
Edited by Siva