கல்லூரி மாணவி பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு; வாலிபர் கைது
மத்திய பிரதேசத்தில் பெண் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கை பயன்படுத்திய கல்லூரி மாணவனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவி, தன் புகைப்படத்தை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் போலியான ஃபேஸ்புக் கணக்கு வைத்திருப்பதாக போலீஸில் புகார் அளித்து இருந்தார். புகாரில் அந்த பெண் தான் ஃபேஸ்புக் கணக்கு தொடங்கவில்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
அதன் அடிப்படையில் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் போலி கணக்கு தொடங்கியவர் சஞ்சய் பட்டேல் என்பது தெரியவந்தது. அவர் கல்லூரியில் பயின்று வருகிறார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
அவர் பெண் பெயரில் போலி கணக்கு தொடங்கி பல பெண்களிடம் பேசி வந்ததுள்ளார். மேலும், புகார் அளித்த கல்லூரி மாணவியின் புகைப்படத்தை வாட்ஸ்அப் மூலம் பெற்றதாக சஞ்சய் தெரிவித்தார்.