செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 27 டிசம்பர் 2022 (19:12 IST)

இளம் ஜோடி மரத்தில் தூக்கிட்டுக் கொலை! அதிர்ச்சி சம்பவம்

உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் என்ற பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒரு இளம் ஜோடி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மா நிலம் பிரதாப்கர் என்ற பகுதியில், ஜெத்வாரா காவல்  நிலைய எஸ்.ஹெச்.ஏ அபிஷேக் கூறும்போது, இளம் ஜோடியை தூக்கில் தொங்கப்பட்ட நிலையில், கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு  அனுப்பப்பட்டுள்ளன.

ஆண்(19), பெண் (18) வயதுடையவர்கள் அவர்கள் ஒரே சாதியைச் சேர்ந்தவர் எனவும்,காதல் பிரச்சனையின் காரணமாகவும் இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்தக் கொலை சம்பவம் பற்றி இதுவரை யாரும் புகார் கொடுக்காத நிலையில், போலீஸார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Edited By Sinoj