புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 24 செப்டம்பர் 2017 (22:57 IST)

விபத்தில் காயம் அடைந்தவர்களை முதுகில் சுமந்து சென்ற பாஜக எம்.எல்.ஏ

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஒருவர் விபத்தில் காயம் அடைந்து பரிதாபமாக உயிருக்கு போராடிய நிலையில் இருந்தவர்களை அம்மாநில எம்.எல்.ஏ சுனில்தத் என்பவர் முதுகில் சுமந்து சென்ற சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 
 
உ.பி மாநிலம் ஃபருக்காபாத் - ஃபடேகார்க் சாலையில் இரண்டு சக்கரவாகனத்தில் சென்ற இருவர் எதிரெதிரே எதிர்பாராத வகையில் மோதிக் கொண்டதில் இருவருமே பலத்த காயமடைந்தனர். 
 
அப்போது அந்த பகுதி வழியாக சென்று கொண்டிருந்த பாஜக எம்.எல்.ஏ சுனில் தத் திவேதி, உடனடியாக அவர்களை தனது காரை நிறுத்தி காயம் அடைந்தவர்களை தன்னுடைய காரிலேயே மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். 
 
ஆனால் மருத்துவமனையில் ஸ்டெரெச்சர் இல்லை என மருத்துவமனை ஊழியர்கள் கூறியதை அடுத்து சிறிதும் யோசிக்காத எம்.எல்.ஏ திவேதி காயமடைந்த மூவரையும் ஒன்றன் பின் ஒன்றாக முதுகில் சுமந்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளார். அவரின் இந்த செயலுக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.