புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 13 ஜூலை 2018 (17:50 IST)

பெண்கள் கள்ளக்காதலில் ஈடுபட்டால் தண்டிக்க சட்டம் இல்லை; மத்திய அரசு தகவல்

கள்ளக்காதலில் ஈருபடும் பெண்களை தண்டிக்க இந்திய சட்டத்தில் இடமில்லை என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.

 
ஆண் - பெண் சமத்துவத்திற்கு எதிரானதாக இருக்கும் ஐபிசி 497வது பிரிவை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 
 
கள்ளக்காதல் விவகாரத்தில் ஆணுக்கு மட்டுமே தண்டனை வழங்கப்படும். பெண் குற்றத்திற்கு தூண்டியவராக கருத முடியாது என்று சட்டத்தில் உள்ளதாக மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்கள் குறித்து சட்டத்தில் எந்த இடத்திலும் தெரிவிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
 
மேலும் கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்களை தண்டிக்க சட்டத்தில் இடம் இல்லாததால் உச்சநீதிமன்றம் இதற்கு தீர்வை வழங்கலாம் என்றும் அதற்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.