1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 18 டிசம்பர் 2024 (16:46 IST)

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

ஆதார் கார்டை புதுப்பிக்க டிசம்பர் 14ஆம் தேதி இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆறு மாத காலம் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய மக்களின் அடையாளமாக விளங்கும் ஆதார் கார்டு, வங்கி கணக்கு தொடங்குவது முதல் அனைத்து சேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் கார்டை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

டிசம்பர் 14ஆம் தேதிக்குள் இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் அதன் பிறகு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது ஆதார் கார்டை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளும் காலக்கெடு 2025ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி வரை ஆறு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெயர், பிறந்த தேதி, முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை பொதுமக்கள் இந்த காலக்கெடுப்புக்குள் இலவசமாக மாற்றம் செய்து கொள்ளலாம். பயோமெட்ரிக் தகவல்கள், கைரேகை, கருவிழி, புகைப்படம் போன்றவற்றிலும் மாற்றம் செய்ய மையங்களை அணுகலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Edited by Siva