1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 12 ஜூலை 2018 (19:35 IST)

கள்ளக்காதலனை போட்டுத்தள்ள கள்ளத்துப்பாக்கி: சென்னையில் துணிகரம்!

கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி ரித்தேஸ்சாய் என்ற 10 வயது சிறுவன் சென்னை எம்ஜிஆர் நகர் நெசப்பாக்கத்தில் கடத்தி கொலை செய்யப்பட்டிருந்தான். 
 
இது விசாரணையின் போது கள்ளக்காதல் தகராறில் இந்த கொலை நடந்தது தெரிய வந்தது. இதனையடுத்து சிறுவனின் தாய் மஞ்சுளாவின் கள்ளக்காதலன் நாகராஜ் கைது செய்யப்பட்டார்.
 
இந்நிலையில் மகன் கொலை செய்யப்பட்ட 5 மாதங்களுக்கு பிறகு மஞ்சுளா, நாகராஜை பழி வாங்க கள்ளத்துப்பாக்கியை வாங்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மஞ்சுளாவின் நண்பர்களான பிரசாந்த், சுதாகர் ஆகியோரின் உதவியுடன் துப்பாக்கி வாங்குவதற்காக அவர்களிடம் ரூ.2 லட்சம் பணம் கொடுத்துள்ளார். 
 
அவர்களும் துப்பாக்கி ஒன்றை அவருக்கு வாங்கி கொடுத்தனர். ஆனால் அது பொம்மை துப்பாக்கி என்பது தெரிய வந்தது. இந்த விவகாரம் போலீஸ் வரை செல்ல, போலீசார் விசாரணைக்கு பின்னர் மஞ்சுளா, பிரசாந்த், சுதாகர் ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர்.