திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 11 ஏப்ரல் 2024 (13:30 IST)

பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து..! 6 மாணவர்கள் உயிரிழந்த துயரம்..!!

School Bus Accident
ஹரியானா மாநிலத்தில் பள்ளி வாகனம் ஒன்று விபத்தில் சிக்கியதில் 6 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
ஹரியானா மாநிலம் நர்னால் மாவட்டத்தில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. வழக்கம்போல் மாணவர்கள் பள்ளி வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வாகனம் உன்ஹானி கிராமம் அருகே வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த  மரத்தின் மீது பயங்கரமாக மோதி மோதி கவிழ்ந்தது.
 
இந்த கோர விபத்தில் 6 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பல பள்ளி மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்த மாணவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரமலான்  பண்டிகையையொட்டி பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அளித்துள்ள நிலையில் இந்த தனியார் பள்ளி இயங்கியதாக கூறப்படுகிறது. மேலும் பள்ளி வாகனத்திற்கான உரிமம் 6 ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியானது விசாரணையில் தெரியவந்துள்ளது.