’’விடாமுயற்சி’’ ஷூட்டிங்கில் நடந்தது என்ன? சுரேஷ் சந்திரா விளக்கம்!
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில், மகிழ்திருமேனி இயக்கத்தில், லைகா தயாரிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி.
இப்பட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், சமீபத்தில் லைகா ஒரு வீடியோ வெளியிட்டது. அதில், அஜித்குமார் ,ஆரவ்வுடன் கார் ஓட்டிச் செல்லும்போது விபத்து ஏற்பட்ட வீடியோவை லைகா வெளியிட்டது.
இது வைரலான நிலையில், அஜித் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அந்த வீடியோவை வெளியிடும்படி அஜித்தான் கூறினார் என தகவல் வெளியானது.
இந்த நிலையில், விடாமுயற்சி பட ஷூட்டிங்கின்போது என்ன நடந்தது ? கார் விபத்து பற்றி அஜித்தின் மேலாலர் சுரேஷ் சந்திரா கூறியுள்ளதாவது;
அஜித் சார் ஒரு காட்சியில் கார் வேகமாக ஓட்டும்போது, ஸ்கிட் ஆகி பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது. இதைப் பார்த்து பதறிய மொத்த படக்குழுவும் அஜித் சாரை நோக்கி ஓடினார்கள். அந்தக் கார் ஹம்மர் என்பதால் பெரிதாக எந்தப் பாதிப்புமில்லாமல் காரில் இருந்து வெளியே வந்துவிட்டார்.
இப்போது இந்த வீடியோவை வெளியிட காரணம் உள்ளது. ஏனென்றால் இப்படி ரிஸ்க் எடுத்து நடிக்கிறார்கள். ஆனால் பலரும் படம் டிராப் ஆகிடுச்சு என்று கூறும்போது. அதில் உழைத்த அத்தனை பேருகும் மனசு கஷ்டமா இருக்கு. அதனால் ரசிகர்களுக்கும் படத்தோட டீமுக்கும் மனத் தெம்பையும் உற்சாகமாக அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், வரும் மே 1 ஆம் தேதி அஜித் பிறந்த நாளில் விடாமுயற்சி பட அப்டேட் வெளியாகும் எனவும்,மக்களவை தேர்தல் முடிந்த பின் அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் ஷூட்டிங்கிற்கு மீண்டும் வெளிநாடு செல்லவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.