வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (07:14 IST)

60ஆம் கல்யாணத்திற்கு சென்று திரும்பிய போது விபத்து.. ஒரே குடும்பத்தில் 5 பேர் பரிதாப மரணம்..!

திருப்பூர் அருகே 60ஆம் கல்யாணத்திற்கு சென்று திரும்பி எப்போது கார் விபத்து ஏற்பட்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஒரு குடும்பத்தினர் தங்களது காரில் 60ஆம் கல்யாணத்திற்காக திருக்கடையூர் என்ற ஊருக்கு சென்று அந்த விழாவில் கலந்து கொண்டு அதன் பின் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் சென்ற காரின் மீது அரசு பேருந்து நேருக்கு நேர் மோதியதை அடுத்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த குடும்பத்தினர்களில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து காரணமாக கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நான்கு மணி நேரமாக துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 60ஆம் கல்யாண நிகழ்வுக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த நிலையில் ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் பலியான சோக சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva