வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (17:05 IST)

ரூ.38,000 கோடி கரண்ட் பில்லை பார்த்து ப்யூஸ் போன நபர்!!

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு மின்சார வாரியத்தில் இருந்து ரூ.38,000 கோடி கரண்ட் பில் வந்துள்ளது.  


 
 
ஜார்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூரில் வசித்து வரும் பி.ஆர்.குகா  என்பருக்கு அந்த ஊரின் மின்சார வாரியத்தால் வழங்கப்பட்ட கரண்ட் பில்லில் 38 ஆயிரம் கோடி ரூபாய் தொகை கட்டணமாக குறிப்பிப்பட்டிருந்தது.
 
மேலும், மின்சார கட்டணத்தை செலுத்தவில்லை என கூறி அவரது வீட்டிற்கான மின்சார விநியோகத்தையும் மின்சார வாரிய அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். 
 
3 அறைகளே கொண்ட தனது வீட்டிற்கு இவ்வளவு தொகை எப்படி வரும் எனவும் விசாரிக்காமல் வீட்டு மின்சார விநியோகத்தை துண்டித்தற்காகவும் பி.ஆர்.குகா மின்சார வாரியத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.