வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 21 ஜூன் 2019 (18:39 IST)

நாய்கள் செய்யும் யோகா- புகைப்படத்தை போட்டு கலாய்த்த ராகுல் காந்தி

உலக யோகா தினத்தை முன்னிட்டி நாய்கள் யோகா செய்வது போல் வெளியிட்ட புகைப்படத்தை ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்டு “புதிய இந்தியா” என பதிவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இன்று உலக யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. டெல்லியில் மோடி யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு யோகா செய்தார். தமிழ்நாட்டில் அமைச்சர் செங்கோட்டையன், தமிழிசை சௌந்தர்ராஜன், தன்ஷிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எல்லாரையும் போலவே காவல்துறையினரும் யோகா செய்தனர். அப்போது அவர்களோடு மோப்ப நாய்களும் யோகா செய்வது போன்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்தனர். இது காலையிலிருந்து இணையத்தில் வைரலானது. அந்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் வெளியிட்ட ராகுல் காந்தி “புதிய இந்தியா” என்று தலைப்பும் இட்டிருக்கிறார். அதாவது புதிய இந்தியாவில் நாய்கள் கூட யோகா செய்கிறது என்று கலாய்ப்பது போல் அந்த பதிவு இருக்கிறது. இது இணையத்தில் வைரலாகி வருகிறது.